இரண்டு மாதங்கள் ஓய்வெடுக்க பவன் கல்யாண் முடிவு
தெலுங்கத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று பரவியதால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஐதராபாத் புறநகரில் உள்ள அவருடைய பார்ம் ஹவுசில் அவருக்கென பிரத்யேகமாக சில மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். கொரோனா தொற்றிலிருந்து உடல்நலம் தேறினாலும் தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை அவர் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளாராம்.
பவன் கல்யாண் நடித்து இந்த மாதம் தியேட்டர்களில் வெளியான 'வக்கீல் சாப்' படம் ஆரம்பத்தில் நல்ல வசூலுடன் ஓடியது. பின்னர் வசூல் குறைந்தது. இந்நிலையில் தியேட்டர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் படத்தை ஓடிடி தளத்தில் இன்று வெளியிட்டுள்ளார்கள்.
பவன் கல்யாண் அடுத்து 'ஹரிஹர வீர மல்லு,' மற்றும் மலையாளத்தில் வெளிவந்த 'அய்யப்பனும் கோஷியும்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். ஜுலை மாதத்திற்குப் பிறகுதான் அப்படங்களின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்ள உள்ளாராம்.