இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா
ADDED : 1659 days ago
வெயில், அங்காடித்தெரு படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் வசந்தபாலன். தற்போது ஜி.வி.பிரகாஷை வைத்து ஜெயில் என்ற படத்தை இயக்கி உள்ளார். அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்கி வருவதுடன் அதை தனது நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்தும் வருகிறார். இந்நிலையில் இவர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுப்பற்றி அவர் கூறுகையில், ‛‛அன்புள்ள நண்பர்களுக்கு. நான் கொரோனோ பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஆதலால் பலருடைய தொலைபேசி அழைப்பை எடுக்க இயல முடியவில்லை. என் மீது பேரன்பு கொண்ட நண்பர்கள், மருத்துவர்கள், உறவினர்கள் சூழ இருக்கிறேன் என்பதே மனதிற்குள் ஆயிரம் யானை பலம் கூடி வருகிறது. ஈராறு கால்கொண்டெழும் புரவியாய் மீண்டும் எழுந்து வருவேன்'' என சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் வசந்தபாலன்.