உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வீழ்ந்து போகிறவர் அல்ல, போராடுகிறவர்: கமல் குறித்து ஸ்ருதி கருத்து

வீழ்ந்து போகிறவர் அல்ல, போராடுகிறவர்: கமல் குறித்து ஸ்ருதி கருத்து

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் குறைந்த ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதாவின் வானதி சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார்.

தேர்தல் வெற்றி எங்கள் இலக்கு அல்ல மக்கள் நலனே இலக்கு தொடர்ந்து மக்களுக்காக உழைப்பேன் என்று கமல் தெரிவித்து விட்டார்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி தந்தையின் தோல்வி குறித்து சமூகவலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது: எதுவாக இருந்தாலும் அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன். அவர் வீழ்ந்து போகிறவர் அல்ல. போராடுகிறவர். என்று குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !