‛ஆர்டிக்கிள் 15' ரீ-மேக் : தன்யா நாயகி
ADDED : 1611 days ago
மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி தன்யா. ‛பிருந்தாவனம், கருப்பன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அடுத்து ஹிந்தியில் வெற்றி பெற்ற ஆர்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிக்கிறார். அருண் ராஜா காமராஜ் இயக்கும் இப்படத்தில் உதயநிதி ஹீரோவாக போலீஸ் வேடத்தில் நடிக்க, அவரது மனைவியாக தன்யா நடிக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் முடிந்த நிலையில் அடுத்து சென்னையில் துவங்க உள்ளது. தற்போது கொரோனா பிரச்னை உடன் அரசியல் பணிகளிலும் உதயநிதி பிஸியாக இருப்பதால் இப்பட படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.