ஒரே நாளில் நடக்கும் கதை எம்எம்ஓஎப்
ADDED : 1613 days ago
ஒரு திரையரங்கில் ஒரு நாளில் நடக்கும் கதையாக உருவாகி வரும் படம் MMOF. இப்படத்தை என்.எஸ்.சி இயக்கி இருக்கிறார். இப்படம் தமிழ் ,தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாராகியுள்ளது. இப்படத்தில் நாயகனாக பல படங்களில் வில்லனாக நடித்த ஜேடி.சக்கரவர்த்தியும், நாயகியாக அரிமா நம்பி படங்களில் நடித்த அக்ஷதாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஸ்ரீராம் சந்திரா, மனோஜ் நந்தன், பேனர்ஜி, செம்மக் சந்திரா , க்ராக் ஆர். பி ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒரு திரையரங்கில் வரிசையாக கொலைகள் நடக்கின்றன. அந்தக் கொலைகளைச் செய்பவர் யார்? என்ன காரணம் ? என்பது புதிராக உள்ளது. பரபரப்பான காட்சிகளோடு சஸ்பென்ஸ் த்ரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது. ஒரு திரையரங்கில் படத்தின் கதை நடந்தாலும் காட்சிகளில் நம்மை கவரும்படி அமைந்திருக்கும். இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.