உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மூப்பில்லா தமிழ் தாயே - ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய ஆல்பம்

மூப்பில்லா தமிழ் தாயே - ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய ஆல்பம்

திரைப்படங்களுக்கு இசையமைப்பதில் பிசியாக இருந்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் அவ்வப்போது ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மூப்பில்லா தமிழ் தாயே என்ற பெயரில் ஒரு ஆல்பம் தயார் செய்துள்ளார்.

இந்த ஆல்பத்தில் உள்ள பாடலை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பூவையாரும் பாடியிருக்கிறார். இந்த ஆல்பத்தில் நடிக்கும் வாய்ப்பினை டிக்டாக் மூலம் பிரபலமாகி இப்போது சுந்தரி என்ற சீரியலில் நடித்து வரும் கேப்ரியல்லாவுக்கு வழங்கியிருக்கிறார் ரஹ்மான். கேப்ரியல்லா மற்றும் பூவையாருடன் இணைந்து தான் எடுத்துக்கொண்ட போட்டோவையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ரஹ்மான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !