கொரோனாவிலிருந்து மீண்ட அதர்வா
ADDED : 1671 days ago
ஆர்.கண்ணன் இயக்கியுள்ள தள்ளிப்போகாதே படத்தில் நடித்து முடித்துள்ளார் அதர்வா. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தனுசுடன் கொடி படத்தில் நடித்த பிரேமம் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இப்படம் முடிந்த சில நாட்களிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டார் அதர்வா. தொடர்ந்து தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது அதிலிருந்து மீண்டுள்ளார். மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டபோது அவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இந்த தகவலை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் அதர்வா. மேலும், கொரோனாவில் இருந்து நான் பூரணமாக குணமடைந்து விட்டேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அனைவரும் நலம்பெற பிரார்த்தனை செய்கிறேன். கவனமாக வீட்டிலேயே இருங்கள் என்றும் தெரிவித்துள்ளார் அதர்வா.