மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1584 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1584 days ago
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆன்ட்ரியாவும் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சற்றுமுன் அவருடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் தெரியப்படுத்தி உள்ளார்.
“கடந்த வாரம் எனக்கு கொரானோ பாதிப்பு பாசிட்டிவ வந்தது. என்னை கவனமாகப் பார்த்துக் கொண்ட எனது நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றிக் கடன்பட்டுள்ளேன். இன்னமும் நான் வீட்டில் தனிமைப்படுத்துதலில் தான் இருக்கிறேன். ஆனால், குணமடைந்து வருகிறேன்.
சமூக ஊடகங்களில் இருந்து கொஞ்சம் விலகி இருந்தேன். எனக்கு ஓரளவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதாலும், இது போன்ற நெருக்கடியான நேரத்தில் நமது நாடும் இருக்கும் போது என்ன பதிவிடுவது. வழக்கம் போல என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனது இதயத்திலிருந்து பாடுகிறேன், அது எல்லாவற்றையும் சொல்லும் என நம்புகிறேன். பாதுகாப்பாக இருங்கள், இதுவும் கடந்து போகும், உங்களின் மறுபக்கத்தைப் பார்க்கிறேன்,” என அவரே பாடி பியானோ வாசிக்கும் ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
1584 days ago
1584 days ago