உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்புவின் மாநாடு டப்பிங் பணி துவங்கியது

சிம்புவின் மாநாடு டப்பிங் பணி துவங்கியது

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் மாநாடு. அவருடன் கல்யாணி பிரியதர்ஷினி, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு, பிரேம்ஜி என பலர் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பிரம்மாண்டமாய் செட் போட்டு படமாக்கி வந்தனர். தற்போது அந்த பணியும் முடிந்துவிட்டது. அதையடுத்து தற்போது மாநாடு படத்தின் டப்பிங் பணி துவங்கி உள்ளது. இந்த தகவலை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, டப்பிங் பூஜையின் போது எடுக்கப்பட்ட போட்டோக்களையும் பகிர்ந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !