படப்பிடிப்பை ஜூலைக்கு தள்ளி வைத்த மகேஷ்பாபு
ADDED : 1634 days ago
தெலுங்கில் பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு - கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் சர்காரு வாரிபாட்டா. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் 35 நாட்கள் துபாயில் நடைபெற்றது. அதையடுத்து ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ள மகேஷ்பாபு, தற்போது ஆந்திராவில் கொரோனா அலை தீவிரமடைந்திருப்பதால் ஜூலை மாதத்திற்கு பிறகு படப்பிடிப்பை நடத்தலாம் என்றும் கூறிவிட்டாராம்.
மேலும், கடந்த ஆண்டில் கொரோனா தொற்று பரவி வந்தபோது செப்டம்பர் மாதத்தில் பல தெலுங்கு நடிகர்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோதும் மகேஷ்பாபு நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொண்டார். அதேபோல் தான் இந்த ஆண்டும் கொரோனா அலை முழுமையாக குறைந்த பிறகுதான் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்று உறுதிபட தெரிவித்துள்ளாராம்.