உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2வது தடுப்பூசி : விழிப்புணர்வில் தீவிரம் காட்டும் நதியா

2வது தடுப்பூசி : விழிப்புணர்வில் தீவிரம் காட்டும் நதியா

கொரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அரசாங்கம் விடுத்த வேண்டுகோளின்படி பலரும் முதல் கட்ட தடுப்பூசி போட்டுக்கொண்டு, இரண்டாவது தடுப்பூசி போடவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் சிலரோ தடுப்பூசி குறித்து அச்சம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மும்பையில் வசிக்கும் நடிகை நதியா, பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் தற்போது போட்டுக் கொண்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “மும்பை நகராட்சி மருத்துவமனையில் ராஜ மரியாதையுடன் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். மருத்துவ சுகாதார பணியாளர்களும், களப்பணியாளர்களும் ஓய்வில்லாமல், சுயநலமில்லாமல் இந்த தேசத்துக்காக பணியாற்றுவதை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. மும்பை மாநகராட்சிக்கு ஹேட்ஸ் ஆப். தயவுசெய்து அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டு உங்களையும் உங்களை சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்திருங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார் நதியா.




இவரைப்போன்று நடிகை சிம்ரன், நடிகர் அருண் விஜய் ஆகியோரும் கொரோனா தடுப்புக்கான முதற்கட்ட தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளனர். மேலும் அனைவரும் தடுப்பூசி போடுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !