விஜய் 65 படத்தில் போதை வழக்கு புகழ் மலையாள நடிகர்
ADDED : 1661 days ago
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை தொடர்ந்து விஜய்யின் 65வது படத்தை இயக்குகிறார் நெல்சன் திலீப்குமார். இந்தப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்தநிலையில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்பவர் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதன் மூலம் முதன்முதலாக தமிழ் திரையுலகில் நுழைகிறார்.
மலையாளத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துவந்த ஷைன் டாம் சாக்கோ, இதிகாசா என்கிற வெற்றிப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். வாய்ப்புகள் நன்றாக தேடிவந்த சமயத்தில் போதைபொருள் பயன்படுத்தியதாக கைதாகி சிறைக்கு சென்றார். அதன்பின் ஜாமீனில் வெளிவந்த இவர், தற்போது நல்ல பிள்ளையாக, நல்ல படங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார் சாக்கோ.