தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி
ADDED : 1625 days ago
கொரோனா பரவலுக்கு பின் ஓடிடியில் நிறைய வெப்சீரிஸ்கள் தமிழிலும் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் தமன்னா நடிப்பில் ‛நவம்பர் ஸ்டோரி' என்ற வெப்சீரிஸ், மே 20ல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸாகிறது. மர்மமான முறையில் கொடூர கொலை ஒன்று நடக்கிறது. அதை செய்தது யார் என்கிற கதையில் சஸ்பென்ஸ் நிறைந்த கதையாக இந்த வெப்சீரிஸ் உருவாகி உள்ளது. பசுபதி, ஜி.எம்.குமார், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்திரா சுப்ரமணியன் இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வெளியாகிறது. தற்போது இதன் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.