அனுஷ்காவின் புதிய படம் ஆகஸ்டுக்கு தள்ளிப்போனது
ADDED : 1613 days ago
பாகுபலி-2விற்கு பிறகு அனுஷ்கா நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. 2018ல் பாகமதி, 2019ல் சைரா நரசிம்ம ரெட்டி(சிறப்பு வேடம்), 2020ல் நிசப்தம் என வருடம் ஒரு படத்தில் தான் நடித்துள்ளார். இந்தஆண்டில் மகேஷ்.பி இயக்கும் ஒரு காதல் கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
யு.வி.கிரியேசன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மே மாதம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஆகஸ்டு மாதத்தில் தொடங்கயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டில் அனுஷ்கா நடிப்பில் எந்த படமும் வெளிவராத நிலை ஏற்பட்டுள்ளது.