விஷால் படத்தில் இணைந்த ரவீனா ரவி
ADDED : 1612 days ago
தன்னுடைய தனித்துவமான வசன உச்சரிப்பால் பல முன்னணி கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்தவர டப்பிங் கலைஞர் ரவீனா ரவி.. பின்னர் ஒரு கிடாயின் கருணை மனு படம் மூலம் நடிகையாகவும் மாறிய இவர், 'காவல்துறை உங்கள் நண்பன்' என்கிற படத்திலும் நடித்தார். அதை தொடர்ந்து தற்போது விஷால் நடிக்கும் படத்தில் இணைந்துள்ளார் ரவீனா ரவி.
சமீபத்தில் விஷால் நடிக்கும் படத்தை து.ப.சரவணன் என்பவர் இயக்குவதாக பட பூஜையுடன் அறிவிப்பு வெளியானது. இந்தப்படத்தில் டிம்பிள் ஹயாத்தி என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு முக்கியமான பாத்திரத்தில் தான் ரவீனா ரவியும் நடிக்கிறாராம்.