உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா படத் தயாரிப்பாளர் கொரோனாவால் மரணம்

சூர்யா படத் தயாரிப்பாளர் கொரோனாவால் மரணம்

பிரபல தமிழ்பட தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர். சூர்யா நடித்த கஜினி, விஜயகாந்த் நடித்த சபரி, பரத் நடித்த பிப்ரவரி 14, கில்லாடி ஆகிய படங்களை தயாரித்தார். கஜினி படம் தவிர மற்ற படங்கள் அவருக்கு நஷ்டத்தை கொடுத்ததால் சினிமா தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

59 வயதான சந்திரசேகர் சேலத்தில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !