உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டாக்டர் ரிலீஸ் பற்றி இப்போது பேச வேண்டாம் - தயாரிப்பாளர்

டாக்டர் ரிலீஸ் பற்றி இப்போது பேச வேண்டாம் - தயாரிப்பாளர்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு, அர்ச்சனா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛டாக்டர்'. அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. இப்படம் முடிந்து ரிலீஸிற்கு தயாராகிவிட்டபோதிலும் கொரோனா உள்ளிட்ட பிரச்னைகளால் ரிலீஸ் ஆக முடியாமல் உள்ளது. கடைசியாக ரம்ஜான் தினத்தில் படம் வெளியாகும் என அறிவித்தனர். ஆனால் கொரோனாவால் இப்போது தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் ரிலீஸாகவில்லை. இதனால் படம் ஓடிடியில் வெளியாக போவதாக செய்திகள் வெளியாகின. ஆனாலும் அதிலும் ஏதோ சிக்கல் நீடிப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் டாக்டர் பற்றி ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டு வந்த நிலையில் இப்பட தயாரிப்பாளர் கே.ஜே.ஆர். ஸ்டுடியோ ராஜேஷ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛டாக்டர் படம் அப்டேட் கேட்டு தினமும் பலரும் எங்களை தொடர்பு கொள்கின்றனர். படமும் முடிந்து ரிலீஸிற்கு தயாராக உள்ளது. இந்த கொரோனா காலத்தில் படத்தை வெளியிட முடியாமல் பொருளாதார ரீதியான பிரச்னைகளையும் எதிர் கொண்டு வருகிறேன். இருப்பினும் என் சக்திக்கு உட்பட்ட அனைத்து நடவடிக்கையை எடுத்து படத்தை ரிலீஸ் செய்ய முயற்சித்து வருகிறேன். மற்றொருபுறம் கொரோனாவால் நம் சுற்றங்களையும், நண்பர்களையும் இழந்து வருகிறோம். இப்படிப்பட்ட சூழலில் டாக்டர் படம் ரிலீஸ் குறித்து நான் பேச விரும்பவில்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். கொரோனா விதிமுறையை பின்பற்றி வீட்டிலேயே அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !