கொரோனாவில் இருந்து குணமடைந்த அம்மு அபிராமி
கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையில் திரையுலகினர் நிறைய பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். அந்த வகையில், ராட்சசன், அசுரன் படங்களில் நடித்த அம்மு அபிராமியும் கடந்த மே 3-ந்தேதி அன்று தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தவர். அதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்து வருவதாக டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது தனது டுவிட்டரில் கொரோனா தொற்றில் இருந்து தான் பூரண குணமடைந்து விட்டதாக ஒரு தகவல் வெளியட்டுள்ளார் அம்மு அபிராமி. நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். கடவுள் அருளாலும், அனைவரது பிரார்த்தனையாலும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து விட்டேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு முடிந்தவரை வெளியில் செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் அம்மு அபிராமி.