ரஜினி உடன் எடுத்த செல்பியை வெளியிட்ட லட்சுமி மஞ்சு
ADDED : 1610 days ago
சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ளார் ரஜினிகாந்த். இதையடுத்து அண்ணாத்த படத்தில் டப்பிங் பேசி விட்டு, விரைவில் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ரஜினி உடன் தான் எடுத்துக் கொண்ட ஒரு செல்பியை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு. தமிழில் கடல், காற்றின் மொழி உள்பட சில படங்களில் நடித்துள்ள லட்சுமி மஞ்சு, பிரபல தெலுங்கு நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான மோகன் பாபுவின் மகள் ஆவார்.
இன்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள இந்த செல்பியை ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ரஜினி நடித்து வந்தபோது அவரை சந்தித்து எடுத்துள்ளார் லட்சுமி மஞ்சு.