உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சோனியா அகர்வால் நடிக்கும் ஹாரர் த்ரில்லர் 'கிராண்மா'

சோனியா அகர்வால் நடிக்கும் ஹாரர் த்ரில்லர் 'கிராண்மா'

கடந்த வருடம் தமிழில் ஹாரர் படங்களின் வருகை குறைவாகவே இருந்தது எனலாம். அந்த குறையை போக்கும் விதமாக, நடிகைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிப் படமாக உருவாகும் படம் 'கிராண்மா'. ஹாரர் த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்தில் சோனியா அகர்வால், நெடுஞ்சாலை புகழ் ஸ்ரீதா சிவதாஸ் மற்றும் ஹேம்நாத் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.

சஜின்லால் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை மஞ்சு வாரியார் மற்றும் விமலா ராமன் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ளனர். இருமொழி படம் என்றாலும், படத்தின் இயக்குனர் உட்பட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !