உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராம் கோபால் வர்மாவின் ‛டேஞ்சரஸ்' - டிரைலர் வெளியீடு

ராம் கோபால் வர்மாவின் ‛டேஞ்சரஸ்' - டிரைலர் வெளியீடு

ஒரு காலத்தில் மெகா படங்களாக இயக்கி வந்த ராம் கோபால் வர்மா சமீபகாலமாக சிறிய பட்ஜெட் படங்களாக எடுத்து தள்ளிக் கொண்டிருக்கிறார். அதிலும் அடல்ட் கண்ட் படங்களை தன் பாணியில் கிரைம் திரில்லராக ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டில் இதுவரை ஐந்து படங்களை இயக்கியுள்ளார் ராம்கோபால் வர்மா.

ஐந்தாவதாக அவர் இயக்கியுள்ள படம் தான் டேஞ்சரஸ். ஆண்களால் ஏமாற்றப்பட்ட இரண்டு பெண்களுக்கிடையே ஏற்படும் காதலை சொல்லும் லெஸ்பியன் வகை படம். இதை கிரைம், திரில்லராக எடுத்துள்ளார். இதில் கவர்ச்சி நடிகைகள் நைனா கங்குலியும், அப்ஸரா ராணியும் படு கவர்ச்சியாக நடித்துள்ளனர். இதன் டிரைலர் வெளியாகி உள்ளது. இதில் இருவரும் கவர்ச்சியில் எல்லை மீறிய ஆபாசத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இப்படத்தை ஸ்பார்க் என்ற தனது ஓடிடியில் வெளியிடுகிறார். இந்த படத்திற்கு இந்தியாவில் முதல் லெஸ்பியன் கிரைம் ஆக்சன் படம் என் விளம்பரம் செய்து வருகிறார் ராம் கோபால் வர்மா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !