புஷ்பா 2 பாடல் : பூஜா ஹெக்டே, திஷா பதானியிடம் பேச்சுவார்த்தை
ADDED : 1610 days ago
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடித்து வரும் படம் புஷ்பா. செம்மரக் கடத்தலை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தில் முதல் பாகத்தில் சிறப்பு பாடல் எதுவும் இல்லை. ஆனால் இரண்டாவது பாகத்தில் ஒரு பாடல் வைக்க திட்டமிட்டுள்ளனர். அந்த பாடலில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து நடனமாடுவதற்காக பூஜா ஹெக்டே, திஷா பதானி போன்ற பிரபல நடிகைகளிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.