உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இறுதி கட்டத்தில் சாய்பல்லவி தங்கை படம்

இறுதி கட்டத்தில் சாய்பல்லவி தங்கை படம்

பிரேமம் படத்தில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சாய்பல்லவி. தற்போது அவரது தங்கை பூஜா கண்ணனும் நடிக்க வருகிறார். பிரபல ஸ்டண்ட் இயக்குனர் சில்வா இயக்கதில் அவர் நடித்து வந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது.

இந்த படத்தில் சமுத்திரகனி, லீமா கல்லிங்கல், இயக்குனர் சுப்பிரமணியம் சிவா உள்பட பலர் நடித்துள்னனர். இப்படத்தின் கதையை இயக்குநர் விஜய் எழுதியிருக்கிறார். அப்பா - மகள் பாசப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தை, முழுக்க பொள்ளாச்சியில் படமாக்கியுள்ளார் இயக்குநர் சில்வா.

தற்போது முழு படப்பிடிப்பு வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது. கொரோனா கால ஊரடங்கு நீட்டிப்பை பொறுத்து தியேட்டரில் வெளியிடுவதா, ஓடிடி தளத்தில் வெளியிடுவதாக என்பதை முடிவு செய்ய இருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !