உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என்னையும் கைது செய்யுங்கள்: ஓவியா ஹெலன்

என்னையும் கைது செய்யுங்கள்: ஓவியா ஹெலன்

இந்தியர்களுக்கு தேவைப்படும் கொரோனா தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள்? என்று பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்கும் வகையில் டில்லியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அந்த போஸ்டர்களை ஒட்டிய 17 பேரை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து தனது டுவிட்டரில் அரஸ்ட் மீடூ - அதாவது என்னையும் கைது செய்யுங்கள் என்று ரகுல்காந்தி டுவீட் செய்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை ஓவியா ஹெலனும் இந்த கைது சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில், ‛‛இது ஜனநாயகமா? என்னையும் கைது செய்யுங்கள் என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே பிரதமர் மோடி சென்னை வந்தபோது ஒருமுறை கோபேக் மோடி என்று டுவிட்டரில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கினார் ஓவியா ஹெலன் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !