உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரம்ஜான் திருநாளில் பேமிலி போட்டோவை வெளியிட்ட துல்கர் சல்மான்

ரம்ஜான் திருநாளில் பேமிலி போட்டோவை வெளியிட்ட துல்கர் சல்மான்

வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களில் நடித்துள்ளவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான். தற்போது நடன மாஸ்டர் பிருந்தா இயக்கி வரும் ஹேய் சினாமிகா என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால், அதிதிராவ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

மலையாளம், தமிழில் பெரிய அளவில் ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள துல்கர் சல்மான், தனது மனைவி அமல் சுபியா, மகள் மரியாவுடன் இணைந்து, தான் எடுத்துக்கொண்ட ஒரு போட்டோவை ரசிகர்களுக்கு ரம்ஜான் பரிசாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவுக்கு ஏகப்பட்ட லைக்ஸ் கிடைத்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !