உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹிந்தி பயிலும் ராஷ்மிகா

ஹிந்தி பயிலும் ராஷ்மிகா

மிஷன் மஜ்னு, குட்பை ஆகிய படங்கள் மூலம் ஹிந்தி சினிமாவில் காலூன்றியிருக்கும் ராஷ்மிகா மந்தனா, இன்னொரு புதிய ஹிந்தி படத்தில் நடிக்கவும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார். பாலிவுட் சினிமாவில் தனக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று நினைக்கும் ராஷ்மிகா தற்போது ஒரு ஆசிரியரை நியமித்து ஹிந்தி பயின்று வருகிறார். அடுத்து தான் நடிக்கப்போகும் புதிய ஹிந்தி படத்தில் தனக்குத்தானே டப்பிங் பேச வேண்டும் என்கிற நோக்கத்தில் ஹிந்தி பயில்வதில் தீவிரம் காட்டி வருகிறார்.

என்னதான் பாலிவுட்டில் நடித்தாலும் மும்பையில் அவர் குடியேறப்போவதில்லையாம். எப்போதுமே எனது தலைமையிடம் ஐதராபாத் தான் என்று கூறும் ராஷ்மிகா, எத்தனை மொழிகளில் நடித்து பிரபலமானாலும் என்னை சினிமாவில் வளர்த்து ஆளாக்கிய தெலுங்கு சினிமாவை ஒருநாளும் மறக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் புஷ்பா, சர்வானந்துடன் ஆதவல்லு மீகுஜோஹர்லு ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !