கமலின் விக்ரம் படத்தில் மற்றுமொரு மலையாள நடிகர்
ADDED : 1604 days ago
இந்தியன் 2 படம் பிரச்னையில் உள்ள நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் கமல்ஹாசன். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ஏற்கனவே மலையாள நடிகரான பஹத் பாசில் நடிக்கும் நிலையில் இப்போது இன்னொரு நடிகராக அம்மாநிலத்தை சேர்ந்த இளம் நடிகர் ஆண்டனி வர்கீஸ் இணைய உள்ளார். இவர், ஏற்கனவே லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, கால்ஷீட் உள்ளிட்ட சில பிரச்னையால் விலகினார். இப்போது மீண்டும் அவரை இந்தப்படத்தில் நடிக்க வைக்கிறார்.