பைரசியில் ராதே : ரசிகர்களை எச்சரித்த சல்மான்
ADDED : 1604 days ago
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், திஷானி பதானி நடித்துள்ள ‛ராதே' படம் கடந்தவாரம் ஓடிடியில் வெளியானது. தற்போது இப்படத்தின் பைரசி அதிகளவில் உலா வர தொடங்கி உள்ளன. இதுகுறித்து, ‛‛ராதே படத்தை நியாயமான விலையாக ரூ.249 கட்டணம் செலுத்தி பார்க்கும் முறையில் வெளியிட்டு இருந்தோம். படத்தை பைரசியில் வெளியிட்டு இருப்பது சட்டப்படி குற்றமாகும். இதுப்பற்றி சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளோம். இதுபோன்ற பைரசி தளங்களில் ரசிகர்கள் படம் பார்க்க வேண்டாம். மீறி பார்த்தால் அவர்கள் மீதும் சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை எடுக்கும்'' என எச்சரித்துள்ளார் சல்மான்கான்.