உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தவறை சுட்டிக்காட்டிய நெட்டிசன் : திருத்திய பிரியா பவானி சங்கர்

தவறை சுட்டிக்காட்டிய நெட்டிசன் : திருத்திய பிரியா பவானி சங்கர்

தமிழ் இலக்கிய பேராளுமை, கரிசல் மண் எழுத்துக்கு சொந்தக்காரர், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர், கி.ரா என்று அன்பாக அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் மறைவுக்கு நடிகை பிரியா பவானி சங்கர் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து இருந்தார்.



எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை என்ற பெயரில் அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், கி.ராவின் பெயரான கி.ராஜநாராயணன் என்பதை கி.ராஐநாரயணன் என பதிவிட்டு இருந்தார். இதுகுறித்த தவறை நெட்டிசன் ஒருவர் சுட்டிக்காட்டினார். அதைக் ஏற்றுக்கொண்ட பிரியா பவானி சங்கர் டுவிட்டரில், ‛‛தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. மன்னிக்கவும், எழுத்துப்பிழை கி.ராஜநாராயணன் என பதிவிட்டார். மேலும் நான் ஆங்கிலம் - தமிழ் கீபோர்டை உபயோகிப்பதில்லை. தமிழ் கீபோர்டில் தான் டைப் செய்கிறேன். பார்வை கோளாறு என நினைக்கிறேன். செக் பண்ணிடறேன் என பதிவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !