உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாடல் அழகி மீது தாக்குதல் : நடிகை சஞ்சனா மீது வழக்கு பதிவு

மாடல் அழகி மீது தாக்குதல் : நடிகை சஞ்சனா மீது வழக்கு பதிவு

கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் சஞ்சான கல்ராணி. போதைப்பொருட்கள் விவகாரத்தில் கைதாகி சிறையில் இருந்தவர், ஜாமினில் வெளியே வந்தார். வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், நடிகை சஞ்சனா கல்ராணி மீது இன்னொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2019ல் லாவல்லி ரோட்டில் உள்ள கிளப்பில் நடிகை சஞ்சனா, மாடல் அழகியும், தயாரிப்பாளருமான வந்தனா ஜெயின் ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்த விருந்தில் ஏற்பட்ட தகராறில் நடிகை சஞ்சனா, விருந்து நடத்திய வந்தனா ஜெயின் மற்றும் அவரது நண்பர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி அடித்ததாக கூறப்படுகிறது. கையில் இருந்த மதுபாணத்தை சஞ்சனா வந்தனா முகத்தில் வீசியதாகவும், இதனால் அவர் கண்பார்வை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வந்தனா சார்பில் கப்பன் பார்க் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக வந்தனா ஜெயின் சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் சஞ்சனா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கப்பன் பார்க் போலீசாருக்கு உத்தரவிட்டது, இதை தொர்ந்து கப்பன் பார்க் போலீசார், நடிகை சஞ்சனா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !