உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் தமிழுக்கு வருகிறார் லாவண்யா

மீண்டும் தமிழுக்கு வருகிறார் லாவண்யா

அந்தாள ராட்சசி தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி. சசிகுமாரின் பிரம்மன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தமிழ் படங்களில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லை என்றாலும் தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இடையில் மாயவன் என்ற தமிழ் படத்தில் நடித்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார் லாவண்யா திரிபாதி. அதர்வா நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ரவீந்த்ரா மாதவன் இயக்குகிறார். படத்தில் நடிகர் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.

லாவண்யா திரிபாதி, ஐஏஎஸ் அதிகாரியாகும் முயற்சியில் ஈடுபட்டு வரும் போது, அவரை ஒரு கும்பல் கடத்துகிறது. ஆனால் அவரை ஏற்கெனவே போலீஸ் அதிகாரியாக இருக்கும் அதர்வா எப்படி காப்பாற்றுகிறார் என்பதும், லாவண்யா யார், அவரை கடத்தியவர்கள் யார் என்பதும் படத்தின் சஸ்பென்ஸ் பகுதி. விரைவில் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !