என்ன நடக்கிறது - முதல்வரை கேள்வி கேட்ட மாளவிகா
ADDED : 1604 days ago
மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடல் காலங்களிலும், நிபா வைரஸ், கொரோனா வைரஸ் போன்ற தாக்கத்திலும் திறம்பட செயல்பட்டு, கேரள மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு உலக அரங்கில் நல்ல பெயரை ஈட்டித்தந்தவர் சுகாாதார துறை அமை்சர் கே.கே.சைலஜா. ஆனால் அவருக்கு புதிய அமைச்சரவையில் இடம் மறுக்கப்பட்டிருப்பது. இது கேரள அரசின் மீது அம்மாநில மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் அம்மாநில நடிகையும், தமிழில் பேட்ட, மாஸ்டர் படங்களில் நடித்துவருமான மாளவிகா மோகனன் டுவிட்டரில், ‛‛சிறந்த அமைச்சர்களில் ஒருவரான சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜாவை அமைச்சரவையிலிருந்து நீக்கி விட்டீர்களே? என்ன நடக்குது முதல்வர் பினராயி விஜயன் அவர்களே?'' என கேள்வி எழுப்பிள்ளார்.