தனுஷின் ஹாலிவுட் படத்தில் இணைந்த ஐஸ்வர்யா சோனார்
ADDED : 1604 days ago
ஜகமே தந்திரம், கர்ணன் படங்களை முடித்த கையோடு, கடந்த பிப்ரவரி மாதம் முதல் 'கிரே மேன்' என்கிற ஹாலிவுட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். ஆண்டனி ரூசோ மற்றும் ஜோ ரூசோ இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படத்தில், ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனாஸ் டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இந்தநிலையில் இந்தப்படத்தில் தனுஷ் தவிர இன்னொரு இந்திய நட்சத்திரமும் நடிக்கிறார். அவர் மராட்டிய நடிகையான ஐஸ்வர்யா சோனார். 2017ல் மராட்டியில் வெளியான காய் ரே ராஸ்கலா' என்கிற படத்தின் மூலம் பிரபலமான இவர், கிரே மேன் படத்திற்காக ஆடிசன் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஆறு மாதங்களாக இந்தப்படத்திற்காக நடைபெற்ற நடிப்பு பயிற்சியிலும் கலந்துகொண்டாராம் ஐஸ்வர்யா சோனார்.