14 வயதில் யுவன் செய்த சாதனை - பழைய நினைவுகளை பகிர்ந்த டி.சிவா
ADDED : 1708 days ago
1997ல் சரத்குமார், நக்மா, பார்த்திபன் நடிப்பில் வெளியான படம் அரவிந்தன். நாகராஜன் இயக்கிய இந்த படத்தை அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா தயாரித்திருந்தார். இந்த படத்தில் தான் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டார். இந்த நிலையில், அந்த படத்தின்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா.
அதில், ‛‛பஞ்சு அருணாசலம், இளையராஜாவின் ஆசீர்வாதத்தோடு 14 வயதில் யுவன்சங்கர் ராஜாவை அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்த நாளை நான் பெருமையுடன் நினைவு கொள்கிறேன். அதோடு அப்படத்தின் இரண்டு பாடல்களின் லிங்கை வெளியிட்டுள்ளார் டி.சிவா. இந்த இரண்டு பாடல்களையுமே ஒரே நாளில் பதிவு செய்தார் 14 வயதான லிட்டில் மாஸ்டர் யுவன் சங்கர் ராஜா என்று தெரிவித்துள்ளார்.