உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெப்சீரிஸில் காஜல் அகர்வால்

வெப்சீரிஸில் காஜல் அகர்வால்

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த நடிகைகள் மட்டுமே வெப் சீரிஸ்களில் நடித்து வந்த நிலையில், தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகைகள் கூட வெப் சீரிஸில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் சமந்தா, பிரியாமணி, ஹன்சிகா, தமன்னா என பல நடிகைகளும் இதில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில், இந்தியன்-2, ஹாய் சினாமிகா, ஆச்சார்யா என பல படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வாலும் தற்போது தெலுங்கில் மாருதி இயக்கும் திரிரோஸஸ் என்ற வெப் தொடரில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அல்லு அர்ஜூனின் ஆஹா ஓடிடி தளத்தில் இந்த தொடர் வெளியாகிறது. ஏற்கனவே இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‛லைவ் டெலிகாஸ்ட்' என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !