இப்போது இந்த ஆட்டம் தேவையா
ADDED : 1598 days ago
டாக்டே புயல் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. பலர் உயிரையும், வாழ்வாதாரத்தையும், வீடு, வாசல்களை இழந்தும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் டிவி நடிகை தீபிகா சிங் என்பவர் புயலால் மரங்கள் விழுந்த இடங்களுக்கு அருகே போட்டோ ஷூட் எடுத்தும், மழையில் ஆட்டம் போட்ட வீடியோவையும் இன்ஸ்டாவில் பதிவிட்டார். இது வைரலாக, ‛‛மக்கள் கொரோனா, புயலால் அல்லப்பட்டு வர இப்போது இந்த ஆட்டம் தேவையா'' என கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.