உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இப்படி ஒரு கதையா? ஓடிடி-க்கு சென்சார் அவசியம்...

இப்படி ஒரு கதையா? ஓடிடி-க்கு சென்சார் அவசியம்...

திரைப்படங்கள் பொழுதுபோக்கு விஷயம் தான் என்றாலும் அதில் அத்துமீறி, வரம்பு மீறி எந்த ஒரு விஷயமும் சொல்லப்பட்டு விடக் கூடாது என்பதற்காக தணிக்கை செய்யும் முறை உள்ளது. ஆனால், ஓடிடி, யு டியூப் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களுக்கு எந்தவிதமான தணிக்கை முறையும் இல்லை. அதனால் தான் சர்ச்சைக்குரிய பல விஷயங்களை கதையாக அமைத்து வெப் தொடர்கள், திரைப்படங்களை தணிக்கை இல்லாமலே வெளியிடுகிறார்கள்.

அமேசான் ஓடிடி தளத்தில் அடுத்த வாரம் வெளியாக உள்ள ஒரு திரைப்படம் 'ஏக் மினி கதா' என்ற தெலுங்குப் படம். இப்படத்தின் கதை என்ன தெரியுமா ?, எழுதுவதற்கே கொஞ்சம் கூச்சமாக உள்ளது. படத்தின் கதாநாயகனுக்கு ஆணுறப்பு அளவு சிறியதாக இருக்கிறது. அதை பெரிதாக்கிக் கொள்ள அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளத் தயாராகிறார். இப்படிப் போகிறது இப்படத்தின் கதை. இப்படத்தை 'பேமிலி என்டர்டெயினர்' என்று வேறு டிரைலரில் விளம்பரப்படுத்துகிறார்கள்.

கார்த்திக் ரப்போலு இயக்கியுள்ள இப்படத்தின் கதையை 'வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்' படத்திற்குக் கதை எழுதிய மெர்லபகா காந்தி எழுதியிருக்கிறார். சந்தோஷ் ஷேபான், காவ்யா தப்பார் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். மே 27ம் தேடி ஓடிடி தளத்தில் இப்படம் நேரடியாக வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !