துணி மாஸ்க் கொரோனா வைரஸ் பரவலை தடுக்காது : எஸ்.ஆர். பிரபு
ADDED : 1645 days ago
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உள்ளிட்ட விஷயங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனபோதும் ஒவ்வொரு நாளும் நோய் பரவல் என்பது அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது. இந்தநிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛‛முழு ஊரடங்கிற்குப் பின்னும் கொரோனா குறையாமல் தொடர, மக்கள் துணியால் ஆன முகக்கவசம் மட்டுமே அணிவதை முக்கிய காரணமாக பார்க்கிறேன். துணி கவசம் 1% கூட வைரஸ் பரவலை தடுக்காது. சர்ஜிகல் மாஸ்க்-ஐ கட்டாயமாக்கலே இதற்கான தீர்வாக முடியும் என நம்புகிறேன். விலைக் கட்டுப்பாடும் அவசியம்'' என பதிவிட்டுள்ளார்.