உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரியல் ஹீரோ சோனு சூட்டின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம்

ரியல் ஹீரோ சோனு சூட்டின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம்

கடந்த ஆண்டில் கொரோனா தொற்று ஏற்பட்டதில் இருந்தே புலம்பெயர்ந்த மக்களுக்கு பல வகையிலும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்த பாலிவுட் நடிகர் சோனுசூட்டின் சேவை இந்த கொரோனா தொற்றிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆக்சிஜன் சிலிண்டர் உதவி கேட்பவர்களுக்கு உடனுக்குடன் வழங்கி பல உயிர்களை காப்பாற்றி வருகிறார்.

இந்த நிலையில் சோனு சூட்டின் இந்த சேவையைப் பாராட்டி ஆந்திராவிலுள்ள நெல்லூரில் அவரது கட்அவுட்டிற்கு மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்துள்ளனர். அதோடு சோனுசூட்டை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு இனிமேல் நாங்களும் இனி உதவுவோம் என அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோவை தனது டுவிட்டரில் பகிர்ந்து பணிவான நன்றி என பதிவிட்டுள்ளார் சோனுசூட்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !