உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிறந்தநாளில் டுவிட்டருக்கு வந்த ஜனகராஜ்

பிறந்தநாளில் டுவிட்டருக்கு வந்த ஜனகராஜ்

எண்பது, தொண்ணூறுகளில் கவுண்டமணி, செந்தில் இருவரும் நகைச்சுவையில் கோலோச்சிக் கொண்டிருந்த சமயத்தில், அவர்களுக்கு இணையாக, பிஸியான காமெடி நடிகராக நடித்து வந்தவர் நடிகர் ஜனகராஜ். குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருடனும் நாயகன், ஆண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட பல படங்களில் நண்பராக, முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில், இணைந்து நடித்தவர்..

ஒரு கட்டத்தில் இளையவர்களின் வருகைக்குப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பட வாய்ப்பு குறைந்து சினிமாவை விட்டு ஜனகராஜ் ஒதுங்கியிருந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான தாதா 87 என்கிற படத்தில், அவர் ஏற்று நடித்திருந்த குணசித்திர கதாபாத்திரம் அனைவரையும் நெகிழ வைத்தது

இதையடுத்து மீண்டும் திரையுலகில் தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்க முடிவு செய்துள்ள ஜனகராஜ் அதற்கு அச்சாரமாக தற்போது முதன்முதலாக சோசியல் மீடியாவில் அடியெடுத்து வைத்துள்ளார் அந்த வகையில் தற்போது டுவிட்டர் பக்கத்தில் தனது பிறந்த நாளன்று புதிய கணக்கை துவங்கியுள்ளார் நடிகர் ஜனகராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !