உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபாஸ் சகோதரியாக நடிக்கும் ஜோதிகா?

பிரபாஸ் சகோதரியாக நடிக்கும் ஜோதிகா?

கன்னடத்தில் கேஜிஎப் என்கிற படத்தை இயக்கி, அதை இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட்டு, வெற்றிபெறச் செய்து அதன்மூலம் பிரபல இயக்குனராக மாறியவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக கேஜிஎப்-2 படத்தை இயக்கிய முடித்துவிட்டு, தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்

இந்த நிலையில் இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகை ஜோதிகா நடிக்கிறார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. இவர் பிரபாஸுக்கு அக்காவாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஜோதிகா தனது இரண்டாவது இன்னிங்ஸிலும், நாயகியாக நடித்து வந்தாலும், தம்பி படத்தில் கார்த்திக்கு அக்காவாக நடித்ததில் இருந்து, இனி இந்த விதமான கதாபாத்திரங்களிலும் அவர் நடிப்பார் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !