உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / போட்டோ பகிர்வை நிறுத்தாத நடிகைகள்

போட்டோ பகிர்வை நிறுத்தாத நடிகைகள்

கொரோனா இரண்டாவது அலை கடுமையாக இருக்கும் இந்த சூழலில் தினமும் தெரிந்தவர்கள், உறவினர்கள் யாராவது ஒருவரின் மரணச் செய்தியைக் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். இந்த துயரமான வேளையில் மற்றவர்களின் துயர்களில் பங்கு கொள்ளவில்லை என்றாலும் ஒரு கொண்டாட்டமான மனநிலையை சிலர் தவிர்க்க மறுப்பது ஏன் என்று தெரியவில்லை.

சமூக வலைத்தளங்களின் பக்கம் சென்றால் இன்னும் சில நடிகைகள் கிளாமர் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு சில நடிகைககள் மட்டுமே கொரானோ பற்றிய பயனுள்ள பல தகவல்களைப் பகிர்ந்து உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சிலராவது வாரத்திற்கு ஒரு முறைதான் அப்படியான புகைப்படங்களைப் பகிர்கிறார்கள். ஆனால், சிலரோ தினமும் பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தப் புகைப்படங்களையும் மெனக்கெட்டு போய்ப் பார்த்து லைக் செய்து கொண்டும் கமெண்ட் செய்து கொண்டும் சிலர் வேறு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !