குஷ்பு, ஊர்மிளா சிறு வயது தோழிகளா ?
தமிழ்த் திரையுலகின் சீனியர் ஹீரோயின் குஷ்புவும், கமல்ஹாசன் நடித்த 'இந்தியன்' மற்றும் பல ஹிந்திப் படங்களில் நடித்த ஊர்மிளா மடோன்கரும் சிறு வயதிலிருந்தே தோழிகள் போலிருக்கிறது.
ரசிகர் ஒருவர் இரு தினங்களுக்கு முன்பு, குஷ்பு, ஊர்மிளா இருவரும் இருக்கும் சிறு வயது புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “இந்த புகைப்படத்தைத் தற்போது சோஷியல் மீடியாவில் பார்த்தேன். இருவரும் இப்போதும் அப்படியே இருக்கிறீர்கள். இரண்டு சிறந்த நடிகைகளை ஒரே படத்தில் பார்ப்பது சிறப்பு. அழகும், திறமையும் இணைந்த கூட்டணி,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு குஷ்பு, “ஊர்மிளா என்னை விடவும் அழகானவர், திறமையானவர்,” எனக் கூறியிருந்தார். பதிலுக்கு ஊர்மிளா, “நன்றி மை டியர், நீங்கள் மிகவும் கனிவானவர். நீங்கள் இப்போதும் அழகாகவும், கருணையாகவும் இருக்கிறீர்கள்,” எனப் பாராட்டியுள்ளார்.
குஷ்பு, ஊர்மிளா இருவருமே அவரவர் மாநில அரசியலில் இருக்கின்றனர். குஷ்பு தற்போது பாஜகவிலும், ஊர்மிளா சிவசேனாவிலும் சமீபமாக தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.