உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புயலில் படப்பிடிப்பு தளம் சேதம்: மன அழுத்தத்தில் அஜித் தயாரிப்பாளர்

புயலில் படப்பிடிப்பு தளம் சேதம்: மன அழுத்தத்தில் அஜித் தயாரிப்பாளர்

அஜய் தேவ்கன் நடித்து வரும் படம் மைதான். அமித் சர்மா இயக்கும் இந்தப் படத்தை தற்போது அஜித் படத்தை தயாரித்து வரும் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படம் படம் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டது. இதன் படப்பிடிப்புக்காக மும்பையில் பிரமாண்ட கால்பந்து மைதான செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. மாதக் கணக்கல் அந்த செட் பயன்படுத்தப்படாததால் வீணானது.

கொரோனா தொற்றின் முதல் அலை முடிந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் மீண்டும் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்தது. சில நாட்களே படப்பிடிப்பு நடந்த நிலையில் 2வது அலை காரணமாக படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டது. அதோடு சமீபத்தில் வீசிய டப் தேவ புயலால் அந்த செட் தரைமட்டமாகி விட்டது. இனி படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டுமானால் புதிய செட் போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போனி கபூர் கூறியிருப்பதாவது: எனக்கு நடந்து கொண்டிருக்கிறது, மிகவும் கொடூரம். அதை நினைத்துப் பார்க்ககூட விரும்பவில்லை. மைதான் ஷெட்டை நினைத்துப் பார்க்கும் மனநிலையில்கூட நான் இல்லை. நஷ்டம் குறித்து நினைத்துப் பார்த்தால் நான் அழத் துவங்கிவிடுவேன். பட்ஜெட் அதிகமாவது, செலவுகள் கூடுவதை நினைத்தால் எனக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. உயிர்சேதம் எதுவும் இல்லை என்பதே மன ஆறுதல் தருகிறது. என்று கூறியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !