அல்லு அர்ஜூனுடன் நடனமாடும் திஷா பதானி
ADDED : 1698 days ago
தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் படம் புஷ்பா. இரண்டு பாகங்களாக தயாராகி வரும் இந்த படத்தின் முதல் பாகம் 2021ம் ஆண்டு ஆகஸ்டு 13-ந்தேதி வெளியாகிறது. இரண்டாவது பாகம் 2022ஆம் ஆண்டு வெளியாக உள்ளது.
இந்நிலையில் புஷ்பா முதல் பாகத்தில் ஒரு சிறப்பு பாடலில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து நடனமாட சில முன்னணி நடிகைகளிடம் பேசி வந்தனர். தற்போது பாலிவுட் நடிகை திஷா பதானி அந்த பாடலுக்கு நடனமாட ஒப்பந்தமாகியிருக்கிறார். கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் இந்த பாடல் படமாக்கப்பட உள்ளதாம்.