லாக்டவுனில் கிச்சன் கில்லாடியான பூஜா ஹெக்டே
ADDED : 1592 days ago
கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டதில் இருந்து மீண்டும் சோசியல் மீடியாவில் பிசியாகி விட்டார் பூஜா ஹெக்டே. குடும்பத்தினருடன் முழு நேரத்தையும் செலவிட்டு வரும் அவர் சமீபத்தில் தனது சகோதரியுடன் தான் எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது விதவிதமான உணவுகள் தயார் செய்வதில் ஆர்வம் காட்டி வருபவர், கிச்சனில் சமையல் செய்யும் ஒரு போட்டோவையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தனது சமையல் திறனை உலகிற்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக தான் சமையல் செய்யும் போட்டோவை வெளியிட்டுள்ள பூஜா ஹெக்டே, அதற்கு லாக்டவுன் எக்ஸ்பிரிமென்ட் என்று பதிவிட்டுள்ளார்.