கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பாரதிராஜா
ADDED : 1592 days ago
கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்திருப்பதால் பாதிப்புகள் அதிகமாகி வருகிறது. இதனால் அனைவருமே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டு அந்த போட்டோவை வெளியிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், டைரக்டர் பாரதிராஜாவும் தேனி அல்லி நகரத்தில் உள்ள தனது இல்லத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அவருக்கு முதல் டோஸ் (கோவிஷீல்டு) போடப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இன்னும் 84 நாட்களில் போடப்படும் என்று அல்லிநகரம் நகராட்சி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.