உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நவம்பர் ஸ்டோரி - தமன்னா நெகிழ்ச்சி பதிவு!

நவம்பர் ஸ்டோரி - தமன்னா நெகிழ்ச்சி பதிவு!

தமன்னா தற்போது நடித்து வெளியாகியுள்ள வெப் தொடர் ‛நவம்பர் ஸ்டோரி'. 7 பாகங்களாக உருவாகியுள்ள இந்த தொடரை ராம சுப்பிரமணியன் இயக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த வாரம் ஹாட் ஸ்டார் விஐபியில் வெளியான இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் தமன்னாவும், ஜி.எம்.குமாரும் அப்பா- மகளாக நடித்துள்ளனர். அவர்களுடன் பசுபதி, அருள்தாஸ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமன்னா கூறுகையில், ‛‛2 ஆண்டுகளில் பல சவால்களை எதிர்கொண்ட ஒரு தொடர். ஒட்டுமொத்த மனச்சோர்வு, குழுவினரின் கடின உழைப்பு காரணமாக இறுதியாக இந்த தொடர் வெற்றிகரமாக வெளியிடப்பட்டுள்ளது. நான் என் இதயத்தையும் ஆன்மாவையும் முழுமனதுடன் ஊற்றிய ஒரு தொடர். இந்த வெப் தொடருக்கு ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்பும் பாராட்டும் மிகுந்த ஊக்கமளிக்கிறது. நல்ல கதைக்களத்துக்கு மொழி ஒரு தடையில்லை என்பதை காட்டுகிறது'' என்றும் தெரிவித்துள்ளார் தமன்னா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !