மகேஷ்பாபு ரசிகர்களுக்கு ஏமாற்றம்
ADDED : 1593 days ago
தெலுங்கில் பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் நடித்து வரு படம் சர்காரு வாரிபாட்டா. கொரோனா தொற்று காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகேஷ்பாபுவின் தந்தையான நடிகர் கிருஷ்ணாவின் பிறந்த நாளான மே 31-ந்தேதி இப்படத்தின் டிரைலர், போஸ்டர் என ஏதாவது ஒரு அப்டேட் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி வந்தன.
ஆனால் இப்போது அப்படக்குழு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று காரணமாக மக்கள் பெரிய அளவில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் மே 31-ந்தேதி சர்காரு வாரிபாட்டா படத்தின் போஸ்டர், டிரைலர் என எதுவும் வெளியிடவில்லை என்று அறிவித்துள்ளனர். இதனால் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.