பூரி ஜெகன்நாத் தான் என்னுடைய எதிரி : விஜயேந்திர பிரசாத்
ADDED : 1592 days ago
பாகுபலி படத்திற்காக அழகான கதையை வடிவைத்ததன் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய கதாசிரியராக மாறிவிட்டார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத்.. ஆனால் அதேசமயம் தன்னைவிட மிக திறமையாளராக, தனக்கு சரியான போட்டியாளாரக அவர் கருதுவது தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத்தை தான்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுபற்றி அவர் கூறும்போது, “பூரி ஜெகன்நாத்தை எனது எதிரி என்றே சொல்லுவேன். அதனாலேயே அவரது புகைப்படத்தை எனது மொபைல் போனில் வால்பேப்பராக பதிவு செய்து வைத்துள்ளேன்.. காரணம் அதை பார்க்கும்போதெல்லாம் அவரை விட இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்கிற உத்வேகத்தை எனக்கு நானே உருவாக்கி கொள்ளத்தான்” என கூறியுள்ளார் விஜயேந்திர பிரசாத்